Latest News

Monday, December 5, 2016

75 நாட்கள் போராடினார்.. இறக்கும்போதும் இரும்பு பெண்மணி என்பதை நிரூபித்த ஜெயலலிதா


ஜெயலலிதா கடைசிவரை நோயை எதிர்த்து போராடி தன்னை ஒரு இரும்பு பெண்மணி என்று நிரூபித்துவிட்டார்.


Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறுதியில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஜெயலலிதா எடுத்த முடிவில் உறுதியாக நிற்கக் கூடிய இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்படுபவர். துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் ஜெயலலிதா.
Jayalalithaa shows why she is called as iron lady
இப்படிப்பட்ட ஜெயலலிதா வெகுநாட்களாகவே நோய் தொற்று பாதிப்பால் அவதிப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோதுகூட, நோய் தொற்று பாதிப்பு பரவிவிடக் கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதா, நேரடியாக களமிறங்கி வெள்ளத்தை பார்வையிடுவதை தவிர்த்ததாக கூறுவர்.
அதேபோல முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவின்போதுகூட அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் அவரது உடல்நிலை தடுத்ததாக கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த தகவல்களை பத்திரிகைகள் வெளியிட முடியாமல் தவித்தன. ஜெயலலிதாவும், நோயை குணப்படுத்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவில்லை. வெளிநாட்டு மருத்துவ உதவிகளையும் நாடவில்லை.
இப்படியாக ஓராண்டுக்கும் மேலாக நோயை எதிர்த்து போராடிய ஜெயலலிதா, கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையிலும் அந்த தீர போராட்டத்தை தொடர்ந்தார். எத்தனையோ உறுப்புகள் செயலிழந்தபோதிலும், அவரது உயிர் எளிதில் பிரியவில்லை. கடைசிவரை ஜெயலலிதா தனக்கே உரித்தான பலத்தை காண்பித்தார். இறக்கும்போது கூட ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணியாகவே பிரிந்தார்.

No comments:

Post a Comment

Recent Post